குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி : உளவுத்துறை | Conspiracy to disrupt the Republic Day celebrations: intelligence !

சென்னை மெரினாவில் மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராடி வந்தனர். இதனை யடுத்து மாணவர்களின் போராட்டத் தால் ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வர் தெரிவித்தி ருந்தார்.


இதனை ஏற்க மாணவர்கள் மறுத்து தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து திங்கட் கிழமை (23ம் தேதி) அதிகாலை போலீசார் மாணவர்களை வலுக்கட்டா யமாக வெளியேறு மாறு உத்தர விட்டிருந்தனர்.

ஆனால் மாணவர்கள் வெளியேற மறுத்து எங்களுக்கு 2 மணி நேரம் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டனர்.

ஆனால் போலீசார் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கிருந்து அடித்து விரட்டி யடித்தனர். இதனால் சில சமூக விரோதிகள் கூட்டத்தி ற்குள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதன் காரணமாக சென்னை நகரமே போர்க்களம்போல் ஆனது.

இந்நிலையில், குடியரசுத்தினத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகள் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

மெரினா கடற்கரை சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், டிஜிபி மற்றும் கமிஷனர், ஏடிஜிபி ஆகியோர் மேற்பார்வை யில் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளதாக டிஜிபி தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings