சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரிடம் பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பெங்களூர் செல்வதற்காக அன்னப்பூர்ணா என்ற மாணவி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென்று மயக்கம் வந்துள்ளது இதனால் மாணவி கீழே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார்.
இதனை யடுத்து அங்கு வந்த போலீசார் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர். மேலும், மாணவியை ஆபாசமாக பேசியதுடன் தாக்கி யுள்ளனர்.
இதனால் மன வேதனையில் இருந்த மாணவி கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் வருகையை அறிந்த மாணவி போலீஸ் மீது அமைச்சர் விஜய பாஸ்கரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் உண்மை என்று தெரியவந்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவியிடம் தெரிவித்தார். போலீசார் மீது பெண் பயணி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.