ஜல்லிக்கட்டு மாணவர்கள் மீது ஐந்தாம் நாள் போலீஸ் ஆடிய கோர தாண்டவம் மிகக் கொடூரமானது என்கிறார் ஆட்சியர் சகாயம்.
அவர்கள் ராணுவக் கட்டுக் கோப்புடன் நடந்து கொண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டார்கள். பல லட்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க கூடியும், ஒரு சிறு அசம்பாவிதம் கூட நாட்டுக்கு ஏற்பட வில்லை.
அப்படி இருக்கும் போது கடைசி நாள் மிக அமைதியாக அவர்களிடம் பேசி இருக்க வேண்டும். மாறாக போலீஸ் ஆடிய கோரதாண்டவம் கொடுமையானது.
அவர்களை அமைதியாக களைந்து போக விட்டிருந்தால் மெரினாவை சுத்தம் செய்துவிட்டே போய் இருப்பார்கள்.
அவர்களை வீணாக பகைத்துக் கொண்டது காவல் துறை என்கிறார். எல்லாம் சரி சார், நீங்க இப்படியே டுவிட்டர் மூலமாக மட்டும் பேசிக் கொண்டி ருக்காமல் களம் காண வாருங்கள்.
நாங்கள் உங்கள் பின்னால் அணிதிரள்கிறோம் என்று மாணவ அமைப்பும் பதிலுக்குடு விட்டுகிறார்கள்.