மும்பையில் நடந்த கபடி போட்டி நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை தவறாக பாடியதாகக் கூறி நடிகை சன்னி லியோன் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த வியாழக் கிழமை மும்பையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் நடந்தது. அந்த போட்டி துவங்கும் முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது.
பாலிவுட் நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடினார். இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்தாராம்.
ஆனால் இவரை நாட்டின் பெருமைக்குரிய சிறந்த பெண்மணியாக பீட்டா அறிவித்து விருதும் கொடுத்து பூரித்தது. இது தான் பீட்டாவின் லட்சணம் என்கிறார்கள் மக்கள்.
மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்லாஸ் என்பவர் டெல்லியில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
சன்னி தேசிய கீதத்தை பாடும்போது வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வில்லை என்று உல்லாஸ் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பாடும் முன்பு சன்னி முறையாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்கிறார் உல்லாஸ்.
ஒரு பிரபலமான நடிகையான சன்னி தேசிய கீதத்தை தவறாக பாடினால் அது அவரது ரசிகர்களை பாதிக்கும் என்று உல்லாஸ் தெரிவித் துள்ளார்.
இதனால் சன்னிக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைது செய்யக் கோரியும் போராட்டம் செய்ய காத்திருகிறார்கள் மும்பை மக்கள். இன்னும் என்ன கொடுமை எல்லாம் நடக்கப் போகுதோ.