பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் ஆகியோர் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் குற்ற வழக்கு பதியப் பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் கொடுத் துள்ள புகார் மனு அளித்துள்ளார்.
அதில் ‘சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ராதா ராஜன் ஆகியோர் தங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் மூலம் கடந்து ஒரு வாரமாக தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் கருத்துப்பதிவு செய்த இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி, ராதா ராஜன் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர்.
இதனால் சுப்பிரமணிய சுவாமி மற்றும் ராதாராஜன் ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனா்.