ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகம் கேட்ட கேள்விக்கு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி விளக்க மளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் மனு குறித்து மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் கேட்ட கேள்விக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி பதில் அளித் துள்ளார்.
அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே சட்டம் இயற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்பதால் அது தொடர்பான சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை என்றும் முகுல் ரோத்ஹி தெரிவித்துள்ளார்.
காளைகளுக்கு துன்பம் விளைவிக்காத வகையில் நிபந்தனையுடன் ஜல்லிக் கட்டு நடத்த மாநில சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்றும் முகுல் ரோத்ஹி தெரிவித் துள்ளார்.