காளைகள் துன்புறுத்தப் படுவதாகவும், மனிதர்கள் கொல்லப் படுவதாகவும் கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து, ஜல்லிக் கட்டை தடை செய்து, காளைகளை காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது உச்ச நீதிமன்றம்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்த படம் பொறிக்கப் பட்டிருந்ததை பார்த்தோம்,
அதேபோல் கடந்த 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட இரண்டனா நாணயத்தில் காளை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.