ஜல்லிக்கட்டுக்கு தற்போது அவசர சட்டம் பிறப்பித்தது பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இருப்பதை காரணம் காட்டி அனைவரும் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த ஒன்று தான்.
ஆகையால் தான் ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர். எனவே போராடும் மாணவர்கள், மற்றும் பொதுமக்களை அரசு திசை திருப்பும் முயற்சியே இந்த அவசர சட்டம் என்றார்.
மேலும், மாணவர்கள் தொடர்ந்து அறவழிப்போராட்டத்தை பின்பற்ற வேண்டும். அறவழியால் போராடும் மாணவர்களை கண்டு அரசால் பதில் சொல்ல முடியவில்லை.
நீங்கள் எழுப்பும் குரல் உலக நாடுகளில் உள்ள அனைவரும் உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.