10 ரூபாய் நாணயம் செல்லும்... ரிசர்வ் வங்கி | 10 rupee coins, the Reserve Bank to !

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும்.


ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங் களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப் பட்டன.

கடந்த 2010–ம் ஆண்டு ஜூலை 15–ந்தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து 10 ரூபாய் நாணயங் களும் புதிய குறியீட்டுடன் தயாரிக்கப் பட்டன.

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூயாய் நாணயங் களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் ன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடி யாகும். மேலும் அனைத்து விதமான பரிவர்த்தனை களுக்கும் ஏற்றவை.

எனவே பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங் களை தொடர்ந்து பயன் படுத்தலாம். இவை சட்டப்படி செல்லு படியாகும் என மீண்டும் உறுதியளிக் கிறோம்.

மேற்கண்ட தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings