ரயில்களின் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் நிறுவன ங்களிடம் ஒப்படை க்கப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக் கைகள் நிறைவு பெற்று விட்டன. இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போதே முன்மொழியப் பட்டது.
ஆனால் அதனை மன்மோகன் அரசு செயல்படுத்த வில்லை. தற்போது பிரதமர் மோடி இந்த திட்டத்தை விரைவு படுத்த உத்தர விட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களின் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் நிறுவனங் களிடம் செல்கின்றன.
அவர்கள் தங்களது நிறுவன தயாரிப்புகளை ரயிலின் உள் மற்றும் வெளிப் புறங்களில் விளம்பரம் செய்து கொள்வார்கள்.
ரயில் நிலையங்களிலும் அவர்களே விளம்பரம் செய்து கொள்வார்கள். பிற நிறுவன ங்களின் விளம்பரங்களை அனுமதிப்பார்களா என தெரிய வில்லை.
இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஒரு பெரும் தொகை வழங்கப்படும். இதனால் ரயில்வே தனது நிதிச்சுமையை பயணிகள் மீது சுமத்தாமல் அந்த வருவாயை கொண்டு ஈடு செய்து கொள்ளும்.
இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது சிறு வயது ரயில் நிலைய அனுபவங் களை நினைவு கூர்ந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட் டுள்ளது.