சென்னை மெரினாவில் போராட்டம் முடிந்து வீட்டிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டுள்ளார்.
அப்பொழுது, அந்த இளைஞர் அக்கா எங்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு என்று சோகமாக கூறியுள்ளான்.
அதற்கு அந்த இளைஞன், ஆமா அக்கா 6 நாள் அங்க தான் இருந்தேன், இப்பொழுது தான் விரட்டி விட்டார்கள் என்று கூறியுள்ளான்.
உடனே அந்த திருநங்கை தன்னிடம் இருந்த நூறு ரூபாயை எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து நல்லா பிரியாணி வாங்கி சாப்பிடு கண்ணு என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த வாலிபர் பணம் எல்லாம் வேண்டாம் அக்கா, என்று மறுக்க ஆனால், அந்த திருநங்கையோ நாங்களும் தமிழர்கள் தான் தம்பி, என்று அந்த வாலிபரின் பையில் திணித்து விட்டு சென்று விட்டார்.
இச்சம்பவத்தை பார்த்த பயணிகள், நாம் எத்தனையோ முறை திருநங்கையை அசிங்கமாக திட்டியுள்ளோம்.
ஆனால், அவர்கள் இன்று செய்த காரியம் நமக்கு எல்லாம் அவர்கள் மீதும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை எம் மனதில் விதைத்துச் சென்றுள்ளது.