த்ரிஷா நாய்கள் மீது பிரியம் உடையவர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு கட்டத்தில், நாட்டு நாய்களை வளருங்கள் என்று சொன்னார் த்ரிஷா. அப்போ தெல்லாம், நமக்கு பீட்டா என்ற அமைப்பு தெரியாது.
ஏன், அவர் நாட்டு தெரு நாய்களை வளர்க்க சொல்லுகிறார் என்றும் தெரியாது. விலங்குகள் மேல் பிரியம் கொண்டவர் என்பதால், விலங்குகளை காப்பாற்றும் அமைப்பு இது வென்று நம்பி, பீட்டா அம்பாசிடர் வரை ஆகிவிட்டார் த்ரிஷா.
ஆனால், இந்த பீட்டா, தமிழர்களின் கலாசார, பொருளா தாரத்தில், ஜல்லிக் கட்டுக்கு தடை கொண்டு வந்து கைவைக்கும் என்று தெரியாத த்ரிஷா தான்,நெட்டிசன்களால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டார்.
அப்புறம் இவரே நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்றவுடன், பீட்டா, இவர் மேல் கோபித்துக் கொண்டது. நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றி பிரசாரம் செய்யும் த்ரிஷா.
காளைகளை கொடுமை படுத்தும் ஜல்லிக் கட்டை ஆதரிப்பதா? என்று கோபித்து, ‘ த்ரிஷா எங்களுடைய விளம்பர தூதர் கிடையாது’ என்று அவமான படுத்தி வெளியேற்றி விட்டது பீட்டா.