மறைந்திருக்கும் பீட்டாவின் உண்மை முகம் !

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால், அதைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. 
மறைந்திருக்கும் பீட்டாவின் உண்மை முகம் !
போன மாதம் டிசம்பர் 16, 2016ம் ஆண்டு. நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றது உண்டு. அது நம் மண்ணின் நாய்கள் இனம். அதை PETA முற்றிலுமாக அழித்து விட்டது என்றே சொல்லலாம்.

நம்மை போன்ற படித்த மக்களுக்கு தெரிந்தது எல்லாம் PUG, LABRADOR, GERMAN SHEPHERD போன்ற அந்நிய நாட்டு நாய்கள் தான். இத படிக்கும் எத்தனை பேருக்கு தெரியும்

நம் மண்ணின் நாய்கள் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை மற்றும் ராஜபாளையம். நம் இன நாய்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

சிப்பிப்பாறை – நம் முன்னோர்கள் வேட்டை ஆட பயன்படுத்துவார்கள். வீட்டிற்கு சிறந்த காவலனாக இருக்கும். Hare என்கிற முயலை விட வேகமாக ஓடக் கூடியது. 

மனிதர்களுடன் நேசம் பழகுவது இதற்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது. கன்னி என்ற நாய். இது உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்குமாம். 

சுயமாக சிந்திக்ககூடிய திறன் படைத்தது. ஆகையால் பழகுவது மிகவும் எளிது. முன்பொரு காலத்தில் பெண் வீட்டார்கள் இந்த நாயை பரிசாக வழங்குவார்களாம்.

கோம்பை என்ற நாயை பண்ணை காவலுக்கு பயன்படுத்துவார்களாம். தனி ஒருவனாக காவல் காப்பார் இவர். இவரை மீறி எந்த மிருகமும் கிட்ட நெருங்க முடியாது. 

காட்டு எருமையை அசால்ட்டாக விரட்டி அடிக்கும் தன்மை இந்த நாய்க்கு இருக்கின்றதாம். ராஜபாளையம் – உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது. உரிமையாளர் தவிர வேற யாரையும் தொடவிடாது. 75cm உயரம் வரை வளரக்கூடியது.
இந்த நான்கு இனங்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது. இந்த இனங்களை மீட்டு எடுத்து பாதுகாக்கவும், அழிவை தடுக்கவும் தமிழ்நாடு அரசு நாய் வளர்ப்பு பிரிவு சைதாப்பேட்டையில் இயங்கி வந்தது.

இவர்கள் நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இங்கு சென்று நம் இன நாய்களை வாங்கி வளர்க்கலாம்.

பீட்டா அமைப்பு 2014ம் ஆண்டு ஆகஸ்டு 4ம் தேதி தமிழ்நாடு உயர் நீதிமன்ற த்தில் இந்த நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் கொடுமைப் படுத்தப் படுகிறது. ஆதலால் இக்கூடத்தை AWBI ஆய்வு செய்து அவரகள் பரிந்துரைத்தால் இக்கூடத்தை மூட வேண்டும் என்று மனு செய்கிறது.

இதற்கு மேல் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். PETA கைப்பாவை AWBI ஆய்வு செய்து “நாய் வளர்ப்பு கூடத்தை” மூட பரிந்துரைத்தது.

அதன்படி உயர் நீதிமன்றம் 2016 டிசம்பர் 16ம் தேதியன்று, நம் இன நாய் வளர்ப்பு கூடத்தை மூட உத்தர விட்டது. PETA அமைப்பு அங்கு நாய்கள் கொடுமை ப்படுத்த படுகிறது என்று உயர் நீதிமன் றத்தில் கொடுத்த ஆதாரம் இதுதான்.

இதை பார்த்து விட்டு சொல்லுங்கள் இதில் எங்கே நாய்களை கொடுமைப் படுத்து கிறார்கள்? ஏன் இதை எந்த தமிழ் மீடியாவும் நமக்கு சொல்ல வில்லை?

வெறும் சில நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டிய பிரச்சனைக்கு எதற்காக உயர் நீதி மன்றம் முற்றிலுமாக மூட சொல்லியது? PETA எதற்காக இந்த நாய் வளர்ப்பு கூடம் மூட இவ்வளவு சிரத்தை எடுத்தது?
பலபேர் யோசிப்போம் இதனால் PETA விற்கு என்ன லாபம் என்று. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவை இல்லை. 

நம் சாப்பிடும் உணவே அதற்கும் போதும். எளிதாக நோய்கள் அண்டாது. முடி உதிரும் தன்மை கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் சம்பாதிக்க முடியும்? 

வெளிநாட்டு நாய்கள் நம் உணவு சாப்பிடாது அதற்கென்று தனி உணவு சூப்பர் மார்க்கெட் ல வாங்கணும். அதை பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். இவை அனைத்தும் வெளிநாட்டு கார்பொரேட் கம்பெனிகளால் இங்கு விற்கப்படுகிறது.

இப்போது நமக்கு புரிந்திருக்கும் பீட்டாவின் உள்நோக்கம். இதனால், பீட்டா போன்ற அமைப்புகளை தமிழகத்தில் எந்தவித செயல் பாடுகளையும் செய்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது. 

தொடர்ந்து பீட்டாவுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே உறுதியான ஒன்றாகும்.
Tags:
Privacy and cookie settings