உலகின் வல்லரசான அமெரிக்கா சிறந்த நாடு இல்லை ஏன்?

அமெரிக்கர்களை விட, இந்தியர்களுக்கு அமெரிக்காவின் மீது பிரமிப்பு அதிகம். ஆனால், அமெரிக்காவை அமெரிக்காவிலேயே கிண்டலடிக்கும் போக்கு சகஜம். 

அப்படி HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நியூஸ் ரூம்” என்ற அரசியல் தொடரில் ஒரு விவாதம் நடந்தது.

அமெரிக்காவை உலகின் சிறந்த நாடு என ஏன் சொல்கிறீர்கள்’ என்ற தலைப்பிலான விவாதத்தில், அனைவரும் அமெரிக்காவின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க, 

ஒருவர் மட்டும் ’இன்னும் அமெரிக்காவை உலகின் சிறந்த நாடென நீங்கள் நம்புகிறீர்களா?’ என்று சாட்டையடியாகக் கேட்பார்.

அந்த உரை கீழே...

“ஒரு சில விஷயங்களின் நிதர்சனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம்தான் உலகின் சிறந்த நாடு எனச் சொல்ல, எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. உலகில் கல்வியறிவில் நாம் 7 வது இடம், கணிதத்தில் 27 வது இடம், அறிவியலில் 22 வது இடம். தனிநபர் ஆயுளில் 49 வது இடம்,

குழந்தைகள் மரணத்தில் 178 வது இடம், குடும்பங்களின் வருமானத்தில் 3 வது இடம், தொழிலாளர் சக்தியில் 4 வது இடம், ஏற்றுமதியில் 4 வது இடம். ஆனால், மூன்று விஷயங்களில் மட்டும் உலகளவில் நாம் டாப் ரேங்கில் இருக்கிறோம்.

அதிகம் சிறைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள நாடு, ராணுவம் மற்றும் ஆயுதக் கொள்முதலுக்கு அதிகம் செலவு செய்யும் நாடு, ’தேவதைகள் நிஜத்தில் வாழ்கின்றனர்’ என நம்பும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு.

இவைகள்தான் அந்தப் பெருமை. 26 நாடுகளின் ராணுவச் செலவைக் கூட்டினால் தொகை தான், நம் நாட்டின் ராணுவ செலவு. அறிவியலில் நாம் முன்னேறி விட்டோம். பூமியைத் தாண்டி பல கிரகங்களைக் கண்டுபிடித்து விட்டோம். பல நோய்களை குணப்படுத்தி விட்டோம். 

நமக்குத் தேவையான உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தேடிச் சென்று அடைகிறோம். ஆனால், உலகின் தேவைகளுக்கு நாம் உதவியதே இல்லை!”
Tags:
Privacy and cookie settings