பெண்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் | We will be safe for women !

தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்காக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சி யாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாகவே மாணவர் களுக்கு இணையாக மாணவிகளும் கலந்து கொண் டுள்ளனர்.


அதேபோல சென்னை மெரினாவிலும் நேற்று காலை முதலே போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய நடந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகளும் ஏராளமாக கலந்து கொண்டனர். இதற் கிடையில் மெரினாவில் மின்தடை செய்து விட்டனர்.

அமைதியான வழியில் நடந்து வரும் இந்த போராட்ட த்தில் மாணவி களிடம் மாணவர்கள் மிகவும் கண்ணிமாக நடந்து கொள்கின்றனர். குறிப்பாக இந்த போராட்ட த்தில் கலந்து கொள்ளும் மாணவி களுக்கு மாணவர்கள் அரணாக இருந்து வருகின்றனர்.

இந்த படத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டு மாணவிகள் பெருமிதம் கொள்கின்றனர். மேலும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள இது பெங்களூரு, டெல்லி இல்லா. தமிழ் நாடுடா என பெருமை பொங்க மீம்ஸ்கள் வெளி யிட்டு உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings