ஜல்லிக்கட்டு மாட்டைப் பற்றித் தெரிந்தது என்ன?

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரோ பகுதியில் கிடைத்த ஒரு முத்திரையில் ஜல்லிக்கட்டுக் காட்சி சித்தரிக்கப் பட்டுள்ளது. கல்லால் ஆன அந்த முத்திரை 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கி யங்களிலும் ஜல்லிக்கட்டு விவரிக்கப் பட்டுள்ளது. அதன் பெயர் ஏறு தழுவுதல். மாடு வீட்டு விலங்காகப் பழக்கப் படுத்தப்பட்ட தொன்மையான நாகரிகங்களில் முதன்மையானது இந்தியா. 

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இந்திய உள்ளூர் மாட்டினங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

மாடுகளின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் விலங்குநல ஆர்வலர்களுக்கு உள்நாட்டு மாட்டினங்கள், அவை வளர்க்கப்படும் முறை, அவற்றின் முக்கியத் துவம் பற்றி என்ன தெரியும்?

தோலின் மேற்புறம் கறுப்பு நிறம் விரவிய காரிக் காளைக்கும், எருமை மாட்டுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியுமா என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

ஆண்டு முழுவதும் மாடுகளுடனும் சாணியுடனும் உழலும் விவசாயிகளை விட, வேறு யாருக்கு மாடுகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை இருக்க முடியும்? உள்ளூர் மாட்டினங்களை நாம் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறோம்?
இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை 130-க்கும் மேற்பட்ட உள்ளூர் மாட்டினங்கள் இருந்தன. இன்றைக்கு 37 மாட்டினங்களே உள்ளன.

தமிழக மாட்டினங்களான காங்கேயம், புளியகுளம் போன்ற மாட்டினங்களின் மேம்பட்ட இனப்பெருக்கத்துக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அடிப்படையாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு முடக்கப் படுவது இந்த மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்கிறார், சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் ஹிமாகிரண்.

உழுவதற்கு, போக்குவரத்துக்கு, விவசாயத்துக்கு ஊட்டம் தரும் எருவுக்குத் தேவையான சாணம், பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல் தயாரிப்பதற்கு, 

சத்து நிறைந்த ஏ2 பாலைப் பெறுவதற்கு என மனித சமூக வளர்ச்சிக்கும் ஆரோக்கிய த்துக்கும் உள்ளூர் மாடுகள் ஆதாரமாகத் திகழ்ந்து வந்துள்ளன.
டிராக்டர், பம்ப்செட் உள்ளிட்ட இயந்திர வேளாண்மையின் ஆதிக்கத்தால் உள்ளூர் மாட்டினங்களை வளர்ப்பது ஏற்கெனவே நெருக்கடிக்குத் தள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு விழாக்களும் நசுக்கப் படுவது உள்ளூர் மாட்டினங்களுக்குச் சாவு மணி அடிப்பதாகவே அமையும். அவற்றைச் சார்ந்திருக்கும் விவசாயிக ளின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகும்.
Tags:
Privacy and cookie settings