நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களில் தேசியகீதம் கட்டாயம் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தியேட்டர்களில் படம் திரையிடுவதற்கு முன்பும் பின்பும் தேசியகீதம் இசைக்கப் பட்டது.
இந்நிலையில், தியேட்டர் களில் தேசியகீதம் இசைக்கும் போது மாற்றுத் திறனாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறை களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ளது.
அதன்படி தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஆனால் சைகைகள் செய்யக் கூடாது.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் முடிந்தால் எழுந்து நிற்கலாம். அறிவார்ந்த இயலாமை உள்ளவர்கள் கை, கால் அசைத்தால் பிரச்னை இல்லை என்றும் ஒரு சில வழிமுறை களை குறிப்பிட்டுள்ளது.