எந்தெந்த கல்லூரிகள் விடுமுறை? விவரம் !

ஜல்லிக்கட்டு அனுமதிக்கக் கோரி நடந்துவரும் போராட்டங்களுக்கு மாணவர்கள் குவியத் தொடங்கியதால் சென்னையில் உள்ள 31 கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.     
எந்தெந்த கல்லூரிகள் விடுமுறை? விவரம் !
எந்தெந்த கல்லூரிகள் விடுமுறை மற்றும் எத்தனை நாட்கள் என்ற விவரங்களை பார்ப்போம். 

அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.

கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை

கோவை அரசு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

கோவை பாரதியார் பல்கலை கழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற உத்தரவிடப் பட்டுள்ளது. 

மேலும் பல கல்லூரிகளில் விடுதி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி, பல்கலை., நிர்வாகங்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் நடைபெறும் மாணவர்களின் போராட்டங்கள் மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings