யாரை கேட்டு வாடி வாசலை தயார் செய்தீர்கள்.. பொதுமக்கள் !

ஜல்லிக் கட்டுக்காக அவசர சட்டத்தை இன்று ஆளுநர் வித்தியாசகர ராவ் அறிவித்தார், இந்த அறிவிப்பை மதுரையில் உள்ள பொதுமக்கள் யாரும் ஏற்று கொள்ள வில்லை.
யாரை கேட்டு வாடி வாசலை தயார் செய்தீர்கள்.. பொதுமக்கள் !
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: ஜல்லிக் கட்டுக்காக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பல லட்சம் பேர் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

ஆனால் இன்று அவசர சட்டம் பிறப்பித்த பிறகு கிராம மக்களிடம் கேட்காமல் போலீசார் வாடி வாசலை தயார் செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாளை கண்டிப்பாக வாடிவாசல் திறக்கப்பட மாட்டாது காளைகளை நாங்கள் கொண்டு வந்தால் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings