சின்னச் சின்ன விஷயங் களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியாகும்... பேருந்தில் பயணம் செய்யும் போது கையைத் தூக்கி கம்பியைப் பிடித்துக் கொள்வதற்கு கூட
ஒரு கணம் தயங்க வேண்டியதா யிருக்கிறது. யாரிடமாவது நெருங்கி நின்று பேசுவதற்குத் கூட யோசிக்க வேண்டி யிருக்கிறது.
காரணம், உடல் துர்நாற்றம். வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிற நம் எல்லோரும் எதிர் கொள்ளும் பிரச்னை தான் இது. இந்த உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது?
நம்முடைய உணவுமுறை கூட இதற்குக் காரணமா? துர்நாற்ற த்தைப் போக்க என்ன வழி? சரும சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் கண்ணன் இதுகு றித்துப் பேசுகிறார்...
‘‘நம் உடலின் தட்ப வெப்ப நிலை அதிகமாகும் போது அதை சீர்படுத்துவ தற்காக sweat glands என்கிற சுரப்பியி லிருந்து வெளியேறுவது தான் வியர்வை.
மனித உடலில் அக்குள் பகுதிகளில் இந்த வியர்வை சுரப்பிகள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து நிறைய வியர்வை வெளியாகிறது.
அதிகமாக படபடப்பாகும் போதும், சூடான திரவங்களைக் குடிக்கும் போதும், அதிர்ச்சி யான விஷயங்களை கேட்கும் போதும் வியர்வை வெளியாகிறது.
சில பேருக்கு நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் அதிகமாக இருப்ப தால் உள்ளங்கை மற்றும் பாதங்களில் இருந்து கூட வியர்வை அதிகமாக வெளியேறும்.
மனித உடலில் வியர்வை வெளியேறு வதற்கான நோக்கமே உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்வதற்கு மட்டு மில்லாமல் உடம்பிலுள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்று வதற்குத்தான்.
இப்படியாக வெளியேறிய வியர்வைக்கென எந்த விதமான வாசனையோ, நிறமோ கிடையாது. வியர்வை வெளியான பின் நுண்ணுயிரி களான பாக்டீரியாக் களின் தாக்குதலால் தான் துர்நாற்றமே வருகிறது.
அதிகமாக வியர்வை வெளியேறும் போது துர்நாற்றம் அதிகமாவ தற்கும் இதுதான் காரணம். அசைவ உணவுகள் சாப்பிடும் போது துர்நாற்றம் வருகிறது என்கிற தவறான கருத்து பரவலாக இருக்கிறது.
உணவு முறைக்கும் துர்நாற்றத் துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உடலை நாம் எவ்விதமாக பராமரித்துக் கொள்கிறோமோ அவ்வளவு துர்நாற்ற த்தைக் குறைக்க வாய்ப்பிருக் கிறது.
உடலைப் பொறுத்து துர்நாற்றத் தின் அளவு மாறுபடும். சின்னச் சின்ன விஷயங் களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற type1 persionalities எனப்படும் நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளி யாகும்.
உழைப்பே இல்லாத மனிதர்கள் சிறிய வேலை செய்தால் கூட வியர்வை அதிகளவில் வெளியாகும். துர்நாற்ற த்தைப் போக்குவ தற்கான வழிகள்...
* துர்நாற்றத் துக்கு முக்கிய காரணமாக இருக்கும் வியர்வையின் அளவைக் குறைக்க வேண்டு மென்றால் வயது, உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
* வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் இரண்டு வேளை குளிக்கும் போது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் சுத்தமாகும்.
* தட்பவெப்பநிலைக்கு உகந்த உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.
* குளித்து முடித்த பிறகு வியர்வை வெளியாவ தற்குள் டியோடரன்ட் (deodorants) பயன்படுத் தலாம்.
அவற்றுள் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரி யல் தன்மை துர்நாற்றம் தரும் பாக்டீரியாக் களை அழித்து விடும்.
* பாடி ஸ்பிரேவினால் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதற்கு பதிலாக ROLLON எனப்படும் திரவ வடிவிலான டியோடரன்டை பயன்படுத்த லாம்.
* அதிக வியர்வை இருந்தால் குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்து விட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்க லாம்.
* உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரியை முறையாக பராமரிக்க வேண்டும்.
* அதிகமாக வியர்வை வெளியேறும் நிலையில் ANTIPERSPIRANTS பயன்படுத்தும் போது வியர்வை யின் அளவு குறைவதால் துர்நாற்ற மும் குறையும்.
* நுண்ணுயிர் கிருமிகளி லிருந்து எடுக்கப்பட்ட புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் BOTOX என்னும் மருந்தை ஊசி மூலம் செலுத்தும் போது அக்குள், உள்ளங்கை, பாதங்களில் வெளியேறும் வியர்வையின் அளவைக் குறைக்க லாம்.
* இயல்புக்கு மாறாக அதிக வியர்வையோ, துர்நாற்றமோ வரும் நிலையில் சரும மருத்துவரை அணுகி தக்க ஆலோசனை களை பெற்ற பின்னர் மருந்துகளை உபயோகிக்க லாம்.