போராட்ட காரா்களை சமூக விரோதிகளாக்கி தடியடி நடத்தியது ஏன் நீதிபதி | Why judge held batons fight social virotiyakki !

ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் தடியடி நடத்தியது ஏன்? என உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.


சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்திய வர்கள் கலைந்து செல்ல அவகாசம் கேட்டும்,

போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்க கோரியும், காயம் அடைந்தவர் களுக்கு சிகிச்சை அளிக்க கோரியும்,

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர், இன்று காலை மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணை க்கு வந்த போது, ஆதாரங்கள் ஏதும் இன்றி விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு கூறி விட்டது.

இதையடுத்து, நீதிபதி மகாதேவன் முன் வழக்க றிஞர்கள் ஆஜராகி இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்தனர்.

மதியம், 2.15 மணிக்கு விசாரிக்க நீதிபதி ஒப்புக் கொண்டார். அதன்படி விசாரணை நடந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், போராட்டக் காரர்கள் போர்வையில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார்.

அப்போது நீதிபதி, போராட்ட கார்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஏன்; வன் முறையில் ஈடுபட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

பொதுமக்கள் பாதுகாப்பை டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும் என உத்தர விட்டார். இந்த செய்தி நீதி மன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
Privacy and cookie settings