தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை யடுத்து, இரண்டு முறை அனுபவமுள்ள மூத்த அமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பொறுப் பேற்றார்.
பன்னீர் செல்வம் எளிமையான முறையில் ஆட்சி செய்து, நாட்டு மக்களில் ஆதரவை பெற்றார்.
இந்நிலையில், ஜெ.,வகித்து வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியை, ஜெ., தோழி சசிகலா ஏற்க வேண்டும் என அ.தி.மு.க.,மூத்த தலைவர்கள் வலியுறுத்திவந்தனர்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறை வேற்றப் பட்டது. அதை தொடர்ந்து சசிகலா பொதுச்செயலாளராக பதவி யேற்று கொண்டார்.
இந்நிலையில் கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். தனி தனியே இருந்தால் தான் அடுத்து இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள எம்.பி.,தேர்தலை சந்திக்க முடியும்.
எனவே சசிகலா உடனடியகா தமிழக முதல்வராக பொறுப்பேற்றக வேண்டும்என பார்லிமெண்ட் துணை சபாநாயகரும்,
அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை வலியுறுத்தி யுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.