கோட்டை கொத்தளத்தில் நடந்த குடியரசுதின விழாவில் தங்களை வி.வி.ஐ.பி.யாக மிணுக்கிக் கொள்ள முயன்ற சசிகலா கோஷ்டியின் முயற்சிகள் முறியடிக்கப் பட்டது.
இதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம் என நம்பும் மூக்கறுபட்டவர்கள், அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா கோஷ்டி முயன்று தோற்றது.
அதன் பின்னர் அ.தி.மு.க பொதுச்செயலள ரானார் சசிகலா. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தது அந்த குடும்பம்.
சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் ஆகிய 4 பேரும் முதல்வர் பதவிக்கு குறி வைத்து காத்து கொண்டிருக் கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த முயற்சியை கடுமையாக தடுத்து நிறுத்தி வருகிறது.
ஓ. பன்னீர்செல்வம், சசிகலா கோஷ்டியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி-களாக தாங்களும் இடம் பெற வேண்டும் என்று அந்த குடும்பம் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தது.
இருந்த போதும் அரசு அதற்கு செவிசாய்க்க வில்லை. அதற்கான விசேஷ பாஸ்களை அபகரிக்க முயன்று தோற்றனர். வி.வி.ஐ.பி. பாஸ்களை கடைசி வரையில் சசிகலா கோஷ்டிக்கு அரசு தரப்பில் கொடுக்கவே இல்லை.
இந்நிலையில் முதன் முறையாக மனைவி விஜய லஷ்மியுடன் குடியரசு தின நிகழ்ச்சியில் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். இது அந்த குடும்பத்தை வயிறு எரிய வைத்திருக்கிறது.