பிளாஸ்டிக் சுற்றுச் சூழலியலில் இனி ஸ்பூனையும் சாப்பிடலாம் !

பிளாஸ்டிக்’, சுற்றுச் சூழலியலில் இந்த நூற்றாண்டின் அபாயகரமான வார்த்தை இது தான்!... நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாகி 
இனி ஸ்பூனையும் சாப்பிடலாம்


விட்ட பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து நாம் அறியாததல்ல. ஆனால் தவிர்க்கும் வழி தெரியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஆய்வின்படி இந்தியாவில் மட்டும் 120 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப் படுகின்றன. பிளாஸ்டிக் ஆனது தாலேட், பென்சீல் வினைல் குளோரைடு 

போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப் பொருட்களின் கலவை. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதெல்லாம் யாருக்கும் தெரியாத புதிய விஷயமல்ல.

இதெல்லாம் தெரிந்தும் நம்மிடையே ’பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதா?’ எனக் கேட்டால் ’இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கான மாற்று இன்னும் கண்டறியப் படாததே. 

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல், துணிப்பை என பயன்படுத்தினாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவை தயார் செய்வதி லிருந்து அது நம் உடலுக்குள் செல்வது வரை பிளாஸ்டிக் நம்மை நேரடியாகவே பாதிக்கிறது.

இதனை தவிர்க்கும் முயற்சியாக சாப்பிட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு பதில் சாப்பிடக்கூடிய ஸ்பூன்கள் (Eatable Spoons) அறிமுக மாகியுள்ளது. 


அதாவது கோன் ஐஸ்-ல் க்ரீமை சாப்பிட்டு விட்டு கீழே கோன் வடிவிலான பிஸ்கட் பகுதியையும் சேர்த்து சாப்பிடுவோமே அது போல, உணவு உண்டபின் உணவை உண்ண நாம் உபயோகித்த ஸ்பூனையும் சாப்பிடலாம்.

அதெப்படி? என உங்க மைண்ட் வாய்ஸ் கேள்விக்கான விடை கீழே…

இது போன்ற ஈட்டபிள் ஸ்பூன்களை ஹைதராபாத்தில் உள்ள பேக்கிஸ் ஃபுட் ப்ரைவேட் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண பீஸாபதி உருவாக்கி இருக்கிறார். 

இந்த ஈட்டபிள் ஸ்பூன்களை சிறு தானியங்கள், அரிசி, கோதுமை மற்றும் சில பல காய்கறிகளை கொண்டு தயாரித்து உள்ளனர். இது மிகவும் சுவை மிகுந்தது மற்றும் நியூட்ரிஷியன் கொண்டதும் கூட.

இது மட்டுமல்லாமல் இவை இன்னும் பல சுவாரஸ்யமான கலவைகள் கொண்டும் தயாராகிறது. அவை சர்க்கரை, இஞ்சி, இலவங்கப் பட்டை, பூண்டு, சீரகம், புதினா, கருப்பு மிளகு, கேரட், பீட்ரூட் ஆகியவை கொண்டும் தயாரிக்கப் படுகிறது.

அரிசியை உற்பத்தி செய்ய கம்பு போன்ற சிறு தானியங்களை விட 40 மடங்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும். இதனால் இந்த ஸ்பூன்கள் அதிகளவு சிறு தானியங்களை கொண்டே தயாரிக்கப் படுகிறது.

“பிளாஸ்டிக்கை எல்லோரும் பரவலாக உபயோகிக்க பொதுவாக சொல்லப்படும் காரணங்களில் அது மிகவும் சீப்பானது என்பது தான் முதன்மை யானது.

இந்த காரணத்தை தகர்த்தெறிய விவசாயி களிடமிருந்து நேரடியாக தானியங்கள் மற்றும் அதற்கான மூலப் பொருள்களையும் பெறுவதன் மூலம் இந்த வகையான ஸ்பூன்களை பிளாஸ்டிக்கை விட மலிவான விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர முடியும். 


மேலும் சிறு தானியங்களின் உற்பத்தியையும் பெருக்க முடியும்” என்கிறார்கள் சுற்றுச் சூழலியலாளர்கள். ஆகவே, இந்த ஸ்பூன்கள் மிகவும் சுவை மிகுந்தவை, நியூட்ரிஷியன் மிகுந்தது மற்றும் சுற்றுசூழல் பாதிப்பில்லாதது. 

சாப்பிட விருப்ப மில்லாமல் தூர எறிந்தாலும் எளிதில் மட்கக் கூடியது. இனி இந்தவகை ஸ்பூனை நாம் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு நம்மாலான பங்களிப்பாக இருக்கும்.

சிறுதானிய ஸ்பூனை பயன் படுத்துவோம், உபயோகித்து பிளாஸ்டிக் தவிர்ப்போம்!
Tags:
Privacy and cookie settings