புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. மாநில தலை நகரங்களில் புத்தாண்டை வரவேற்க இளைஞர்கள் உற்சாகமாக ஒரே இடத்தில் கூடி ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதே போன்று பெங்களூருவில் நடந்த கொண்டாட்டத்தில், இளம் பெண் ஒருவரிடம் இளைஞர்கள் அத்து மீறியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு எம்.ஜி. ரோடு, பிரிகேட்ரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்களிடம்,
போதையில் சில இளைஞர்கள் தவறாக நடந்து கொண்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் வெளியாகின.
இதில் பாதிக்கப் பட்ட சில இளம் பெண்கள் அழுது புழம்பியவாறு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் அளித்தனர்.
எம்.ஜி.ரோட்டில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். பெண்களுக்கும் குழந்தை களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டது.
இருப்பினும், கட்டுக் கடாங்காத கூட்டத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளது, என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறினார்.