சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கூறி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்க ப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மடைந்ததால் அவரது பெயர் மட்டும் நீக்கப் பட்டது.
இதனை யடுத்து, மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித் துள்ளனர்.
தற்போது, சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளதால், அவர் அடுத்த 10 ஆண்டு களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதன் மூலம் சசிகலா, முதல்வராக பதவி ஏற்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.