ஜெயலலிதா வின் அண்ணன் மகனான தீபக் திடீரென சசிகலா தரப்புக்கு எதிராக பேசியுள்ளார். ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதம் 100 கோடி ரூபாயை தானே
செலுத்துவதாக ஜெயலலிதா வின் அண்ணன் மகனான தீபக்கூறி யுள்ளார். மேலும் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
ஜெயலலிதா மறைவின் போது சசிகலா தரப்பால் அணைத்துக் கொள்ளப் பட்டவர் அவரது அண்ணன் மகனான தீபக்.
ஜெயலலிதா வுக்கு குடும்பத்தினர் என்ற முறையில் இறுதிச் சடங்கு செய்யவும் சசிகலா குடும்பம் அவருக்கு அனுமதி வழங்கியது.
அன்று முதல் சசிகலா அத்தை என்று வாயார கூறி வந்தார். தீபா சசிகலா குடும்பத்தை எதிர்த்தப் போதும் கூட தீபக் அவர்களு க்கு ஆதரவாகவே இருந்து வந்தார்.
கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது.
அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவு க்கு 100 கோடி ரூபயும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிறையில் கடந்த 16ஆம் தேதி அடைக்கப் பட்டனர்.
நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு டிடிவி தினகரனுடன் சென்ற தீபக் சசிகலாவை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு பிரத்தியோக பேட்டி யளித்தார்.
அப்போது தனது அத்தை ஜெயலலிதாவு க்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கியாவது கட்டுவேன் என தெரிவித் துள்ளார்.
சகோதரி தீபாவுக்கும் தனக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், அதிமுகவின் தலைமையா டிடிவி தினகரனை ஏற்க முடியாது என்றார்.
ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என்றும் அவர் தீபக் கூறினார்.
இதுவரை சசிகலா தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த தீபக் இன்று திடீரென டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.