பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்தனர் !

0 minute read
மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 15 பேர் உயிரிழந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள, 
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்தனர் !
சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கி, இடிந்து விழுந்தன.

இரவு நேரத்தில் துாங்கிக் கொண்டிருந்த மக்கள், அலறியடித்து, வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன
Tags:
Privacy and cookie settings