134 எம்எல்ஏ-க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என தம்பிதுரை ஆவேசமாக தெரிவித்தார். சற்று நேரத்திற் கெல்லாம் பேசிய அதிமுக பொது செயலாளர் சசிகலாவும் 134 எம்எல்ஏ-க்களும் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.
யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது, என அவரும் தன் பங்குக்கு தெரிவித்துப் போனார். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.
சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம் ஒபிஏஸ்க்கு ஒபிஎஸ்-க்கு தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இவர் மட்டுமின்றி ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஒபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தலீத் சமூகத்தைச் சேர்ந்த 31 சட்டமன்ற உறுப்பினர்களில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒபிஎஸ் ஆதரவில் உறுதியாக இருப்பது தெரிகிறது.
ஒபிஎஸ் முன்பிருந்தே திட்டம் தீட்டி கணக்குப் போட்டு சசிகலா கோஷ்டி, கண்ணில் மண்ணைத் தூவி வந்திருக்கிறார் என்பதே உண்மை.
எனவே குறைந்தபட்சம் 20 எம்எல்ஏ-க்கள் வெளியில் வந்தால் கூட அதிமுக அரசுக்கு தேவையான பெரும்பாண்மை பலம் மொத்தமாக குறைந்துவிடும்.
சபாநாயகர், ஒபிஎஸ் தவிர்த்து மீதமுள்ள 134 பேரில் 22 பேர் வெளியில் வந்தார் 112 பேர் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பர். இதில் மெஜாரிட்டுக்கு 6 பேர் குறைவாக உள்ளனர்.
ஒபிஎஸ் இறங்கி அடித்தார் என்றால் மேலும் பல எம்எல்ஏ-க்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆனால், நடப்பது நடக்கட்டும் என ஏனோதானோ என விட்டுவிட்டால் மைனாரிட்டி அரசு சசிகலா தலைமையில் அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.