22 வருடமாக சாக்கடையில் குடும்பம் நடத்தும் தம்பதிகள்?

1 minute read
கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
22 வருடமாக சாக்கடையில் குடும்பம் நடத்தும் தம்பதிகள்?
இந்த தம்பதிகள் கொலம்பியாவின் போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யக் கூடிய மேடெல்ளின் என்ற பகுதியில் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது இவர்கள் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகினர்.

ஆழ்ந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலுடன், போதை பழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தார்கள்.

அவ்வாறு போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும் கூட இவர்களுக்கு உதவுவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தினால், சாக்கடையில் தங்கி வாழ்வதற்கு முடிவு செய்தார்கள்.
பின் இந்த தம்பதிகள் வாழ்க்கையின் துவக்கத்தில், நிறைய தொல்லைகள் ஏற்பட்டது. ஆனாலும் அதை யெல்லாம் தாண்டி, தங்களுக்குள் காதலை வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.

மனதில் நிறைந்த காதலுட வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் சாக்கடையை விட்டு வெளியேறும் எண்ணம் கொள்ளாமல், தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் வாழ்ந்து வருகின்ற சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அறை, விளக்குகள் 
இவை அனைத்தையும் அமைத்துக் கொண்டு மற்றவர்களை போல கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கூட கொண்டாடுகிறார்கள்.

இது மட்டுமில்லாமல் இந்த தம்பதிகள் பிளாக்கி எனும் நாயை தனது வீட்டின் காவலனாக வளர்த்து வருகின்றார்கள்.
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings