ஒரு நாள் என்பது 24 மணி நேரம் : யார் சொன்னது !

ஒரு நாள் என்பது 24 மணி நேரம்...! ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...! ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...!

ஒரு நாள் என்பது 24 மணி நேரம் : யார் சொன்னது !
இதெல்லாம்... எப்படி... யார்... எந்த அடிப்படையில்... எப்போது கண்டுபிடித்து கணக்கிட்டு வகுத்தார்கள்...? ஆச்சர்யம் தானே...?!

ஒரு நாள் என்பது எது என்பதை... சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் இவற்றை க்கொண்டு மனித சமுதாயம் ஆரம்ப காலத்திலேயே எளிதாக அறிந்திருக்கும். 

அதனால், 'நாள் எது?' என்ற இந்த கண்டு பிடிப்பு - இதொன்றும் அதிசயம் இல்லை தானே..?

ஒரு மாதம் என்பதற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சிந்தனை ஒன்றும் தேவை இல்லை. 

சந்திரனை பின் தொடர்ந்து 12 அமாவாசை அல்லது 12 பெளர்ணமி மூலம் சுலபமாக வகுத்துக் கொள்ளலாம்.

இதனால், வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்றும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 354 days 8 hrs 48 minutes and 36 seconds என்று கண்டு பிடித்தது ஒன்றும் வியப்பல்ல தானே..?

ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள் கொண்டது என்பதும் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு பெரிய கண்டுபிடிப்பு அல்லதானே..?

இந்த சந்திர ஆண்டு சுழற்சியானது விவசாயம் செய்யும் நாடுகளுக்கு விவசாய காலங்களை அறிய வேண்டு மானால் ஒத்துவராது. 

இது பருவ காலங்கங் களுக்கு மாற்றமாக உள்ளதால்...

நாளடைவில், கோடை, குளிர், மழை மற்றும் வசந்தகாலம் போன்ற (spring autumn summer winter) பருவ காலங்களை அடிப்படை யாக வைத்து... 

'ஆண்டு என்பது சூரியனின் அடிப்படையில் 365 நாட்கள்' என்று இவர்கள் உருவாக்கி யிருக்கலாம்.
ஒரு வருடத்தின் நீண்ட பகல் அல்லது நீண்ட இரவு என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மாறுவது உன்னிப்பாக கவனிக்கப் பட்டு பின்னர் 365-ல் உள்ள தவறு களையப்பட்டு

நான்காண்டு களுக்கு ஒருமுறை 366 நாட்கள் கொண்ட லீப் வருடம் வந்திருக்கலாம். 

ஆனால், அதுவும் கூட பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 365 days, 5 hours, 48 minutes, 45 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்ல.

மேலே உள்ளவற்றில் ஒரு சாராரின் 'சந்திர சுழற்சி ஆண்டை' இன்னொரு சாரார் ஏற்றுக் கொள்ளாமல் 'சூரிய சுழற்சி ஆண்டை' அடிப்படையாக இருத்திக் கொண்டனர்.

ஆனால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... 

"ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும்

அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் உலகம் முழுக்க அனைத்து சித்தாந்த/ கொள்கை/ சமய/ சிந்தனா வாதிகளும் எப்படி ஏற்றுக் கொண்டனர்..?

"ஒரு வாரம் என்பதற்கு ஏழு நாட்கள்" என்றுகூடத்தான் எவ்வித அடிப்படையும் இன்றி ஏற்றுக் கொண்டனர் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஆனால், அது ஓரளவுதான் உண்மை. ஏனெனில், உலகில் பலர், எது வாரத்தின் முதல் நாள் என்று வேறுபடு கின்றனர். 

பெரும்பாலும், ஞாயிறு முதல் நாள் என்றும், ISO 8601 மற்றும் அதற்கு நிகரான அளவினர் திங்கள் தான் முதல் நாள் என்றும், சிலர் சனிக்கிழமை தான் முதல் நாள் என்றும் கொண்டுள்ளனர்.

வாரநாட்களின் பெயர்கள் கூட பல சமூகத்தில் மாறு பட்டன. அந்தந்த கால கட்டத்தில் மக்கள் தம் கண்ணால் கண்ட 

அல்லது தொலை நோக்கியால் கண்டு  பிடிக்கப்பட்ட கோள்களையும், எண்களையும், அந்தந்த சமுதாய அரசர் பெயர்களையும் வைத்துக் கொண்டனர்.

இன்னும் சொல்வதென்றால்... Basque, Igbo, Javanesne, Akan, Roman, Baltic, Aztecs, Maya, Bali, Shang dynasty's China, Revolutionary France நாட்காட்டிகள்.. 

என இவற்றில் எல்லாம் 'ஏழு நாட்கள் ஒரு வாரம்' என்று ஏற்றுக் கொள்ள வில்லை.
மாறாக, முறையே... 3, 4, 5, 6, 8, 10, 13, 20 நாட்கள் கொண்டது தான் ஒரு வாரம் என்று தங்கள் நாட்காட்டிகளை வகுத்தனர்..!

மேலும், என்னைப்போன்று round the clock 3-shift duty யில் 4 குழுவினராக பிரிந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நிறைந்த

தொழிற் சாலைகளில் ஆறு நாட்கள் வேலை பார்த்தவுடன் 7-வது மற்றும் 8-வது நாட்கள் வார விடுமுறை..!

கடந்த 15 வருடங்களாக இப்படி பணியாற்றும் எனக்கு, ஒரு வாரம் என்றால் அது 8 நாட்கள்..! :-) ஆக, 

இது எப்படி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை..! நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறோம்.

உதாரணமாக, நம் நாட்டில் முன்னர் 16 அனா ஒரு ரூபாய் என்று இருந்து... 
முன்பு அதற்காகவே 16-ஆம் வாய்ப்பாடு வரை பள்ளி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்கப் பட்டது தெரியுமா..?

அது தவறு என்றுணர்ந்து பின்னர் நாமாகவே "ஒரு ரூபாய்க்கு 100 காசுகள்" என்று மாறி விட்டோம். 

இன்றும் கூட உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள் 50 காசை எட்டணா என்றும் 25 காசை நாலணா என்றும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

இப்படியாக வாரத்தை தம் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டது போல, அது ஏன் 'ஒரு நாள்' என்பது பத்து மணி நேரம் என்று 'ரவுண்டாக' மாற்ற முயலவில்லை..?

ஒரு மணிநேரம் என்பது 100 நிமிடம் என்றெல்லாம் முழுநிறை வாக மாற்ற முயலவில்லை..? 

இந்த 24ஐயும் 60ஐயும் எப்படி உலகம் முழுக்க அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்..? இவை எந்த அடிப்படையில் உண்டாக்கப் பட்டன..?

நேரம் என்பது ஆக சிறிய அலகுவான நொடியில் ஆரம்பிக்கிறது. 

இந்த அளவை தீர்மானித்தது எந்த அறிவியல் அடிப்படையில்..? இதன்படி ஒரு நாளைக்கு 86,400 வினாடிகள் வருகின்றது.

இந்த வினாடி அளவினை சற்று குறைத்து (அதாவது வேகமாக துடிக்க வைத்து) 100 வினாடி ஒரு நிமிடம்; 
100 நிமிடம் ஒரு மணி; 10 மணி நேரம் ஒரு நாள்... அதாவது ஒரு நாளைக்கு 1 லட்சம் வினாடிகள் ...என்று வருமாறு ஏன் முயற்சி செய்ய வில்லை..!?!

காலத்தை அளவிடப்பயன்படும் அடிப்படை அலகுவான நொடி அல்லது வினாடி என்பது 60 நொடிகள் சேர்ந்தால் 1 நிமிடம். 

நொடி என்பது அனைத்துலக முறை அலகில் second என்னும் பெயரால் குறிப்பிடப் படுகின்றது.

அறிவியல் வளர்ச்சி பெற்ற பின்னருங் கூட, மிகத்துல்லிய மான நிலை நாட்டலின் படி, ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்ப நிலையில் இருக்கும்

ஒரு சீசியம்-133 அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுகு 

இடையே நிகழும் 192 631 770 அலைவு-களின் கால அளவு ஆகும் என்று 'ரிவர்சில்' 1967ஆம் ஆண்டு 'கண்டுபிடிக்கப்பட்டது'..!

(In 1967 the 13th General Conference on Weights and Measures defined the second of atomic time in the International System of Units as the duration of 9,192,631,770 periods of the radiation corresponding to the transition between the two hyperfine levels of the ground state of the caesium-133 atom.)

இதுவும் நாம் தற்போது பயன்படுத்தும் நொடி அளவும் ஆச்சர்யப்படத்தக்க அளவில் ஒன்றுதான்..!
இப்படியாக எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... 

"ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும் அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் எப்படியோ

உலகம் முழுக்க உள்ள அனைத்து சித்தாந்த, கொள்கை, சமய, சிந்தனா வாதிகளும், 

இந்த நூற்றாண்டு அறிவிய லாளர்களும் எதிர் கேள்விகள், மாற்றுக் கண்டு பிடிப்புகள் என 

ஏதுமின்றி அனைவரும் ஒருசேர ஏற்றுக் கொண்டதும் ஆச்சர்யமானது தானே..?

அப்படியெனில், 'வினாடி'யை இது தான்... என துல்லியமாக வகுத்து, "ஒரு நாள் = 24 மணி நேரம்" என்று முதலில் சொன்னது யார்..? 

வரலாறு எழுதப் படாத அந்தக்கா லத்திலேயே ஒரு நாளை 24 பகுதியாக பிரித்த அந்த அதிசய அறிவாளி யார்..?
Tags:
Privacy and cookie settings