சி 3 தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி... ஐகோர்ட் !

1 minute read
சூர்யா நடிப்பில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்ட மாக வெளி வரவுள்ளது. 
சி 3 தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி... ஐகோர்ட் !
ஆனால் இந்த படத்திற்கு திருட்டு டிவிடி மற்றும் திருட்டுத் தனமாக இணைய தளத்தில் புதிய படங்களை ஒளிபரப்பு வோர்களிடம் இருந்து வெளிப் படையான சவால் வந்துள்ளது என்பதையும், 

இது குறித்து இந்த படத்தின் தயாரிப் பாளரின் உணர்ச்சி வசப்பட்ட கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'சி 3' படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
ஆனால் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக கூறியு ள்ளது.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings