தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்து ள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அதிமுக பொது செயலாளர் சசிகலாவிற்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுப்பிய போர்க்கொடி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் இந்த பரபரப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் ஆட்சி அமைக்க தன்னையே அழைக்க வேண்டும் என சசிகலா ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
அதே போல், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டார். தற்போது என் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என ஓ.பி.எஸ், ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், 24 மணி நேரம் ஆகியும் ஆளுநர் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை. இதனால், யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அநேகமாக, சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சசிகலாவிடமோ அல்லது ஓ.பன்னீர் செல்வத்திடமோ கூற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் ஓ.பி.எஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டால் பிரச்சனை இல்லை. ஒருவேளை, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டால் அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால், கலவரங்கள் வெடிக்கலாம்.
இதையே காரணமாக வைத்து மத்திய அரசு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கலாம். அதன் பின் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் படலாம்.
அல்லது தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டசபையில் வாக்கெடுப்பிற்கே வாய்ப்பு கொடுக்காமல்,
சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், ஆளுநர் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.