ஐந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது.
ஒரு முறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்பு மணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகி யிருக்கிறது.
அதே போல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையின் போது இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்தி ருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வருகிறார்.
இந்த நிலையில், 'சசிகலாவை முதல்வராக்க வேண்டும்' என்று கட்சி நிர்வாகிகள் சிலர், பன்னீர் செல்வத்தை வற்புறுத்தி, அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாகப் பத்திரிகையா ளர்களிடம் கூறியிருந்தார்,
ஓ.பி.எஸ். இதனால் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று முறை முதல்வர் நாற்காலியில் உட்காரு வதற்கு அதிர்ஷ்டம் பெற்ற ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாழ்க்கையும்,
முன் எப்போதும் மக்களின் பிரதிநிதியாகாத, முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆயத்தமாகும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கையும் எப்படி இருந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.