நீண்ட நாட்களாக எதிர் பார்க்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 8 நிமிடங்க ளுக்குள் நீதிபதிகள் வாசித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் 6ம் எண் கோர்ட்டுக்கு காலை, 10:32 மணிக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் வந்தனர்.
அங்கு ஏராளமான வழக்கறி ஞர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் கூடி இருந்தனர். தீர்ப்பை வெளியிடு வதற்கு முன்பு நீதிபதிகள் இருவரும் சில வினாடிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பார்வை யாளர்கள் கேலரியில் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து, நீதிபதி கோஷ் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசிக்க தொடங்கினார். 8 நிமிடங்களில் தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.
அவர் தீர்ப்பை வாசித்து முடித்த உடனேயே அந்த அறை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தி யாளர்கள் அவர்களது அலுவலக த்துக்கு செய்தியை தெரிவிக்க தீவிரம் காட்டினர்.
நீதிபதி அமித்வா ராய் அவரது தீர்ப்பை வாசிக்க ஆரம்பிக்கும் முன்பு, ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்தார்.