மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு வீடற்ற 90 ஏழைகளுக்கு 2 ஏக்கர் பரப்பளவில் நகரத்தை உருவாக்கி அதில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே லாசர் நகரில் ஆடை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அஜய் முனாத். இவரது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை சிறப்பிக்க வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி செலவில் 90 வீடுகளை கட்டி ஏழைகளுக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
வீடுகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக அவர் மூன்று தகுதிகளை குறிப்பிட்டு இருந்தார். தனிநபர் ஏழையாக இருக்க வேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்க வேண்டும்,
போதைக்கு அடிமையாகா தவராக இருக்க வேண்டும் என்ற தகுதிகளை கொண்டு பயனா ளர்களை தேர்வு செய்துள்ளார். முனாத் கட்டி தந்த வீட்டில் இதுவரை 40 குடும்பங்கள் குடியேறி யுள்ளது.
இதுகுறித்து முனாத் மகள் ஸ்ரேயா கூறுகையில், இந்நடவடி க்கையை நான் பெரிதும் பாராட்டு கின்றேன், இதை என் திருமண பரிசாக நினைக்கின்றேன் என்று மகிழ்ச்சி தெரிவித் துள்ளார்.
இது பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த ஐடியா என்று அஜய் முனாத் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ 500 கோடி செலவில் தடபுடலா திருமணம் நடத்தி யிருந்தது குறிப்பிட த்தக்கது.