மாலை 5:30க்கு ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி !

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5:30 மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளார். ஆளுநர் நேரம் வழங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.
மாலை 5:30க்கு ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி !
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் ஆளுநரை சந்திக்கின்றனர். அப்போது ஆட்சி அமைக்க எடப்பாடி உரிமை கோருகிறார்.

கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி உள்ளிட்டோர் சற்று முன் புறப்பட்டனர். 

இதனிடையே கூவத்தூர் சென்று சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை மூளைச் சலவை செய்யச் சென்ற அமைச்சர் மாபா பாண்டியராஜனை போலீசார் கோவளத்தில் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆட்கள் கூவத்தூர் செல்வதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings