விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கூடாது.. ஹைகோர்ட் !

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்ய மேலும் 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். 
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கூடாது.. ஹைகோர்ட் !
தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந் துள்ளது என்றும் அதற்கான காரணம் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத 

வீட்டு மனைகளாக மாற்றியதே என்றும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்று வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்சட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் போது, 

அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு தடை விதித்து உத்தர விட்டனர். 

இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணை க்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அரசாணையை தாக்கல் செய்தார். 

அதில், தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 2008, பிரிவு 22-ஏ-வின்படி இந்த அரசாணை, கடந்த (2016ம் ஆண்டு) அக்டோபர் 20-ந்தேதி பிறப்பிக்கப் படுகிறது. 
இந்த அரசாணை உட்பிரிவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தும், 

இந்த அரசாணை பிறப்பிப் பதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப் பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது' என்றும் கூறப் பட்டிருந்தது.

இந்த அரசாணையை படித்த நீதிபதிகள், தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப் படுத்தப் பட்டுள்ளன? என்பதை முதலில் அரசு தெளிவுப் படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து, ஏற்கனவே பிறப்பித்த தடையை அகற்ற மறுத்து விட்டனர். 

அந்த வழக்கானது பல கட்ட விசாரணை களுக்கு பிறகு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு ரமேஷ், நீதிபதி மகாதேவன் தலைமையில் இன்று விசாரணை க்கு வந்தது. 

அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யா துரையிடம் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், கூடுதல் கால அவகாசம் கோரினார். 

அப்போது குறுக்கிட்ட ரியல் எஸ்டேட் தரப்பு வழக்கறிஞர், மூன்று முதல்வர்கள் மாறியும் வீட்டுமனை சட்டத்தை முமறைப் படுத்துவ தற்கான அரசு உரிய முடிவை தமிழக அரசு எடுக்க வில்லை என்றார். 
இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்வதற்கான தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப் படுகிறது. 

பத்திரப் பதிவு தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க இதுவே இறுதிக் கெடுவாகும். முடிவு எடுத்தப் பின்னர் தடை நீக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தர வித்தனர்.
Tags:
Privacy and cookie settings