அதிமுக எம்எல்ஏ -க்களுக்கு எச்சரிக்கை போர்டு !

ஜெயலலிதாவின் மறைவை யொட்டி, முதல்வராக பன்னீர் செல்வமும், அதிமுக வின் பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப் பேற்றனர். 
அதிமுக எம்எல்ஏ -க்களுக்கு எச்சரிக்கை போர்டு !
இதனைத் தொடர்ந்து கட்சியின் பொறுப்பும் ஆட்சியின் பொறுப்பும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என சசிகலா ஆதரவு அணியினர் விரும்பினர்.

பின்னர் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக் கப்பட்டார். தனது முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். 

ஆனால், சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அதிமுக தொண்டர் களும், தலைவர் களும் பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ், திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியானத்தை கலைத்த ஓபிஎஸ் சசிகலா வுக்கு எதிராக பேட்டி ஒன்றை கொடுத்தார்.

இதனை யடுத்து, அதிர்ச்சி யடைந்த எம்எல்ஏ க்கள் போயஸ் கார்டன் விரைந்தனர். 

அங்கிருந்து, அனைத்து எம்எல்ஏ க்களையும் கல்பாக்கம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் சசிகலா ஆதரவாள ர்களால் சில நாட்கள் அடைத்து வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்எல்ஏ க்களின் தொகுதியில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆங்காங்கே போஸ்டர் களும், தகவல் பலகைகளும் வைக்கப் பட்டன. 

சமூக வலைத் தளங்களிலும் சசிகலாவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.

இந்நிலையில், கிராமம் ஒன்றின் சாலை யோரத்தில், சசிகலாவை ஆதரித்த எம்எல்ஏவே இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைக்காதே, மீறினால் எங்கள் காலணி பேசும்’’ என்று எழுதிய தகவல் பலகையை மக்கள் வைத்து ள்ளனர். 

இந்த எச்சரிக்கை பலகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings