அ.தி.மு.க. என்னுடைய கட்சி... பன்னீர் செல்வம் !

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சி தலைமை மீது கடுமையான விமர்ச னங்களை முன் வைத்து வருகின்றார். பொதுச் செயலாளர் பதவி பறிப்பு, முதலமைச்சர் பதவியை கட்டாயமாக எழுதி வாங்கியது,
அ.தி.மு.க. என்னுடைய கட்சி... பன்னீர் செல்வம் !
ஜெயலலிதா மறைவில் மர்மம் என்று, சசிகலா தரப்பு மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கி வருகின்றார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் பன்னீர் செல்வம். 

இதனால், தமிழக அரசியல் பன்னீர் செல்வம் புதிய கட்சி தொடங்குவாரோ? என்ற கேள்வி எழுந்து வருகின்றது. 

இந்நிலையில் பத்திரிகை யாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும் கூறுகையில்,ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.
யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் யாருடன் தொடர்பில் இருக்கக் கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டிக் காட்டி உள்ளார் என்றார் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித் துள்ளார்.

வாக்களித்த மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும். என்னுடைய பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் யாரும் இல்லை.

புதிய கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. அ.தி.மு.க. தான் என்னுடைய கட்சி. அதில் தான் நான் பயணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings