இந்திய விமானப் படை தளத்தில் விமானப்படை வீரரை உடன் பணிபுரியும் ஒருவரே கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்த விமானப் படை கார்போரேல் அதிகாரி விபன் சுக்லா(27) என்பவர் சார்ஜென்ட் அதிகாரி சுலேஷ் குமாரின் மனைவியுடன் கள்ளத்
தொடர்பு வைத்தி ருந்ததால் ஆத்திர மடைந்த குமார், சுக்லாவை கொலை செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பதிண்டா காவல் கண்காணிப் பாளர் ஸ்வப்ன ஷர்மா கூறுகையில், பஞ்சாப் விமானத் தளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சுக்லா மனைவி இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.
இங்கு வந்த சில மாதங்க ளிலேயே குமாரின் மனைவி அனுராதா பட்டேலுடன் நெருக்கம் ஏற்பட்டு, அவர் கர்ப்பமானார்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு அனுராதா வற்புறுத்தி வந்த நிலையால் தான் ஏற்கனவே திருமண மானவன் என்று கூறி மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுக்லாவின் மனைவி கும்கும் பஞ்சாபி விமானத் தளத்திற்கு வந்து அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அனுராதா கர்ப்பமடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அவரது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த குமார், தனக்கு வேறு இடத்தில் வீடு ஒதுக்கப் பட்டதை யடுத்து, விமானப்படை குடியிருப்பில் இருந்து காலி செய்ய உதவ வருமாறு கடந்த பிப்.8ஆம் தேதி இரவு சுக்லாவை வீட்டிற்கு அழைத் துள்ளனர்.
அவர் வந்தபோது, கூர்மை யான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, அவரது உடலை வெட்டி 6 பிளாஸ்டிக் பையில் வைத்து விட்டு புதுவீட்டிற்கு சென்று ள்ளனர்.
இதனிடையே, தனது கணவரை காணவில்லை இருக்க கூறி பிப்ரவரி 9ஆம் தேதி சுக்லாவின் மனைவி கும்கும் பல்லுவானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப் படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுக்லா வசித்து வந்த விமானப்படை குடியிருப்புப் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்திய போது,
குமார் வசித்த வீட்டின் அலமாரி மற்றும் ஃப்ரிட்ஜில் இருந்து 16 பிளாஸ்டிக் பைகளில் இருந்து சுக்லாவின் உடலை காவல் துறையினர் மீட்டதாக கூறி யுள்ளார்.
இதை யடுத்து, குமார், அவரது மனைவி அனுராதா மற்றும் தம்பி பூஷன் மீது கொலை, சாட்சி யங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்