சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த சிறை பற்றிய சில தகவல்களை இங்கே பார்ப்போம்...
பெங்களூரு- ஓசூர் ரோட்டில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அமைந்துள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறை நிறுவப்பட்டது.
2000-ம் ஆண்டு மத்திய சிறை என பெயர் சூட்டப்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறை கர்நாடகத்தின் மிகப்பெரிய சிறையாகும்.
கர்நாடகத்தில் அதிக கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறை என்ற பெயரை பரப்பன அக்ரஹாரா பெற்றுள்ளது.
40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சிறையில் 2,200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. இருப்பினும், சிறையில் தற்போது 4,400-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப் பட்டுள்ளதாக சொல்லப் படுகிறது.
சிறைச் சாலையை சுற்றி உயர்ந்த சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டு இருப்பதுடன், முள் கம்பி வேலி போடப் பட்டுள்ளது.
விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பிரபல மானவர்கள் உள்பட பலர் இந்த சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா,
முன்னாள் மந்திரிகள் ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்யா செட்டி ஆகிய பிரபலங்கள் இங்கு சிறைவாசம் அனுபவித் துள்ளனர்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு இதே வழக்கில் தண்டனை பெற்று பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
Tags: