அலெக்சாவின் வியக்க வைக்கும் நவீன வசதிகள் !

அமேசான், தன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, அலெக்சாவை கடந்த ஆண்டு வீட்டு உபயோக சாதனங்கள் வடிவில் அறிமுகப் படுத்தியது.
அண்மையில், பிரிட்டனில் கார்களிலும் அலெக்சா பயன்பட ஆரம்பித் துள்ளது. சிறிய ஒலி பெருக்கியைப் போன்ற தோற்ற முள்ள ‘எக்கோ, எக்கோ டாட்’ ஆகிய அச் சிறு சாதனங்கள் வீட்டு உதவி யாளராக செயல்படுபவை. 

வீட்டிலிருப்பவர், தன் குரல் மூலம் அவற்றுக்கு உத்தர விட்டு இயக்க முடியும். இப்போது அலெக்சா மென்பொருளை, பிற நிறுவனங்களும் உரிமம் பெற்று தங்கள் கருவிகளில் பயன்படுத்த முடியும். 

எனவே, ‘லாஜிடெக்’ நிறுவனம் பிரிட்டனில் கார்களுக்கு ‘டேஷ் போர்’டில் பொருத்திக் கொள்ளும் ‘அலெக்சா’ சாதனம் ஒன்றை அறிமுகப் படுத்தி யுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தைக் கொண்ட மொபைலை இடை முகமாக வைத்து, இந்த டேஷ் போர்டை கை சைகை மற்றும் குரல் மூலம் இயக்கலாம். 
ஓட்டுனர் பயணித்த படியே, தனக்குப் பிடித்த பாடல், அல்லது ஒலி நுால் போன்ற வற்றை கேட்டால், அலெக்சா அதை தேடி எடுத்து போட்டுக் காண்பிக்கும். 

அல்லது வீட்டிலி ருக்கும் அலெக்சா சாதனத்தை தொடர்பு கொண்டு, விளக்கு, ‘பிரிஜ், ஏசி,’ வாசல் கதவுகள் ஆகிய வற்றை இயக்கலாம். 

அன்று செய்ய வேண்டிய வேலைகளை பதிவு செய்து, அலெக்சாவை நினை வூட்டச் சொல்லலாம். அருகாமை யிலுள்ள நல்ல உணவகங்கள், வணிக வளாகங் களைப் பற்றி தகவல் கேட்டால், அலெக்சா புட்டுப் புட்டு வைக்கும். 

வாகனத்தில் பயணிக்கும் குழந்தை களுக்கு பொழுதைப் போக்க அலெக்சா, பாடல்கள், கதைகள் போன்ற வற்றை தேடி எடுத்து, ப்ளே செய்யும். 
இது மட்டுமல்ல, தற்போது வாடிக்கை யாளர்களுக் காக அலெக்சா மென் பொருளால், 8,000 விதமான வேலை களை செய்து முடிக்கும் திறனைப் பெற்றுள்ளது. 

இந்தத் திறன் வங்கியில், தினமும் பல மென் பொருள் வல்லுநர்கள் புதுப் புது திறன்களை சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings