ஜெயலலிதா பெயர் நீக்க போறேன் ஆச்சார்யா அதிரடி !

1 minute read
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 2வது குற்றவாளியாக உள்ள
ஜெயலலிதா பெயர் நீக்க போறேன் ஆச்சார்யா அதிரடி !
சசிகலாவுக்கு பெரும் பங்கு உள்ளதாக கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு நாளை மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். எனவே அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

இது குறித்து ஆச்சார்யா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தான் இறந்துள்ளார்.
ஆனால், ஜெயலலிதா வழக்கின் விசாரணை காலம் முழுவதும் உயிருடன் இருந்ததால் வழக்கின் தீர்ப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.

அதே வேளையில் வழக்கில் தொடர்புடையவர் இறந்து விட்டால் அவரது பெயரை நீக்க வேண்டும். இதனை அரசு வழக்கறிஞர் என்ற முறையில் நான் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்படி ஜெயலலிதாவின் பெயரை வழக்கிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மனுதாக்கல் செய்வேன் என்று தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
எனவே இதற்கான சிறப்பு மனு ஒன்றை நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம். 

அதில் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்ட தகவலை கூறி வழக்கில் இருந்து அவரை பெயரை எடுத்து விடும்படி வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப் பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். 

எனவே மற்ற 3 பேருடைய பெயர்களும் தொடர்ந்து நீடிக்கும். அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். அவர்கள் 3 பேரும் தவறு செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. 
எனவே அவர்கள் தண்டனை பெறுவது உறுதி என அவர் கூறியுள்ளார். 
மேலும், இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது.

ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டது, பொது ஊழியரின் பெயரைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான பல உறுதியான ஆதாரங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

ஆகவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை அளிக்கும் என நம்புகிறேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings