சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு விறு விறுப்புடன் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக் குழுவினர் மலேசியா செல்லவுள்ள தாகவும், அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ள தாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் 'சென்னை 60028' உள்பட பல படங்களில் நடித்தவரும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அச்சமின்றி' படத்தின் ஹீரோவுமான விஜய் வசந்த் இணைந் துள்ளார்.
ஒருசில ஊடகங்கள் விஜய் வசந்த் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றார் என்று கூறுவதில் உண்மை யில்லை என்றும்,
சிவகார்த்தி கேயனின் நண்பராக விஜய் வசந்த் நடித்து வருவ தாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவ தாகவும் படக்குழுவினர் களிடம் இருந்து தகவல்கள் வெளி வந்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.