ஆண்களையும் ஆணாதி க்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சி யொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப் படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலி செய்யும் வகையில் அமைந் துள்ளன.
சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட் டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது,
பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணி களைப் பெண்கள் அணிந்து கொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமைக்கப் பட்டுள்ளன.
பெண்களை மனதளவில் நோயாளியாக மாற்றும் ஆண்கள் அழிந்து போக வேண்டும் என்பதான பாடல் வரிகள் சவுதி அரேபியர் களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளன.
மேலும், முஸ்லிம் களுக்கும் பெண் களுக்கும் எதிரான வராகச் சித்திரிக்கப் படும்
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப் படமும் இந்தப் பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் பாடல் வெளியானதை யடுத்து உலகளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து ள்ளமை குறிப்பிடத் தக்கது.