ஜெயலலிதாவு க்கு ஒரு தோழி கிடைத்ததை போல், அவரது அண்ணன் மகள் தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி கிடைத் துள்ளார். அவர்தான் பேரவையின் தலைவரா கவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் பிரசாரங் களை விடியோ எடுப்பதற் காக ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சசிகலாவும் உடனி ருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் சசிகலாவும், நடராஜனும் ஜெயலலிதா வுக்கு உறுதுணை யாக இருந்தனர்.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வரான ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தி னரை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தங்க அனுமதித்தார்.
பின்னர் சசிகலா வின் அக்காள் மகன் சுதாகரனை தத்து எடுத்த ஜெயலலிதா, அவரது திருமண த்தை நடத்தியதன் மூலம் மக்களின் அதிருப்தியை சம்பாதித்தார்.
நடராஜனின் செயல்பாடு
இந்நிலையில் நாளாக நாளாக ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலாவின் கைஓங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நடராஜனின் தலையும் தூக்க ஆரம்பித்ததால் ஜெயலலிதா வுக்கும்,
சசிகலா வுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவான நிர்வாகி களை ஜெயலலிதா ஓரங்கட்டியே வைத்தார்.
மரணம் வரை தொடர்ந்த நட்பு
ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், இல்லா விட்டாலும் அவரது நிழல் போல் சசிகலா தொடர்ந்தார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சைக் குரிய கருத்துகளை தெரிவித்த போது கூட சசிகலா தனது தோழி என்று ஜெயலலிதா தெரிவித் திருந்தார்.
இவ்வாறு மரணப் படுக்கையின் போது ஜெயலலிதா வுடன் சசிகலா பயணித்தி ருந்தாலும் அவர் பொது மக்களின் செல்வாக்கை பெறவில்லை.
தீபா வருகை
ஜெயலலிதாவின் உறவினர் களான தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையும், இறந்த பிறகும் கிட்டயே நெருங்க விட வில்லை சசிகலா. இதுதொடர்பாக சசிகலா மீது தீபா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
நிர்வாகிகள் நியமனம்
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையை ஏற்படுத்திய தீபா அதற்கான நிர்வாகி களையும் நியமித் துள்ளார்.
பேரவைத் தலைவராக ஆர்.சரண் யாவையும், மாநிலச் செயலாளராக ஏ.வி. ராஜாவையும், நியமித்தார். பின்னர் பேரவையின் பொருளாளராக தானே செயல்படுவேன் என்றும் தெரிவித் திருந்தார்.
என் தோழி சரண்யா
தி.நகரில் உள்ள தீபா வீட்டில் செய்தியாளர்களை தீபா இன்று சந்தித்தார். அப்போது தீபா பேரவையின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள
சரண்யா யார் என்று செய்தி யாளர்கள கேள்வி எழுப்பினர். அதற்கு சரண்யா தனது தோழி என்று தீபா தெரிவித்தார்.
இன்னொரு "சசிகலா"!
இது குறித்து தீபா மேலும் கூறுகையில், பேரவையின் தலை வராகவும், மாநில செயலா ளராகவும் நியமிக்கப் பட்டுள்ள சரண்யாவும், ராஜாவும் எனது தோழர்கள் என்றார் அவர்.
ஜெயலலிதா வுக்கு சசிகலா என்ற ஒரு தோழி கிடைத்தது போல் தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி கிடைத் திருக்கிறார்.
என்ன வித்தியாசம்?
சசிகலா தனது தோழியின் பொதுச் செயலாளர் பதவியை அவர் இறப்புக்குப் பின்னர் எடுத்துக் கொண்டார். ஆனால் தீபாவோ தனது தோழிக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்.
எது எப்படியோ ஜெயலலிதா வுக்கு கூடா நட்பு கேடாய் முடிந்தது போல் தீபாவுக்கு ஆகாமல் இருந்தால் சரி என்று அரசியல் பார்வை யாளர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.