தமிழக சட்ட சபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாய கத்துக்கு இழுக்கு ஏற்பட் டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியின் காரணமாக சட்டசபை போர்க்கள மானது. சபாநாயகரின் மைக் உடைக்கப் பட்டது.
எதிர் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பின ர்களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ க்கள் உண்ணா விரதம் இருந்தனர். பின்னர் கைதாகி விடுதலை செய்யப் பட்டனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாள ர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்ட சபையில் நேற்று நடந்த நிகழ்வுகளால் ஜனநாய கத்துக்கு இழுக்கு ஏற்பட் டுள்ளது. இது குறித்து நான் வேதனைப் படுகிறேன். எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.