சட்ட சபையில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. சபாநாயகரின் இருக்கையும் அடித்து நொறுக்கப் பட்டது. இதையடுத்து சபாநயாகர் தனபால் அவையை ஒத்தி வைத்து விட்டு போய் விட்டார்.
தமிழக சட்ட சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது. ஆனால் வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓ.பி.எஸ் அணியும், காங்கிரஸும் வலியுறுத்தின.
ஆனால் அதை சபாநாயகர் கேட்கவே இல்லை தொடர்ந்த மறுத்து வந்தார். இதையடுத்து திமுக வினரும், காங்கிரஸாரும், ஓபிஎஸ் அணியினரும் கொந்த ளித்தனர். சபாநாயகர் முன்பு கூடி போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து கலவரம் வெடித்தது. சபாநாயகர் இருக்கை தாக்கப்பட்டது. நாற்காலிகளைத் தூக்கி வீசினர். இதை யடுத்து பிற்பகல் 1 மணி வரை சபையை ஒத்தி வைத்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் சபாநாயகர் தனபால்.