சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதால், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று தங்குகிறார்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன் றத்தில் நான்கு பேரும் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப் படுகிறது. நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வராய் அமர்வு தீர்ப்பை வழங்க இருக்கிறது.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏ க்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.
மூன்றாவது நாளாக இன்றும் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை க்கு பிறகு அவர் சென்னை திரும்ப மாட்டார் என்று கூறப்ப டுகிறது. அங்கே அவர் தங்குவ தாகவும் தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளதால் சசிகலா கூவத்தூரில் தங்க முடிவு செய்திருப்பது அதிமுகவி னரிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.